யாழ். மீசாலையிலுள்ள கடையில் தீ விபத்து!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் – மீசாலை இராமாவில் பகுதியில்  ஏற்பட்ட தீ விபத்தால் கடைத்தொகுதி தீக்கிரையாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (டிசம்பர் 13) இரவு 10:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – மீசாலை இராமாவில் பகுதியில்  ஏற்பட்ட தீ விபத்தால் கடைத்தொகுதி தீக்கிரையாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 10:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் கடைத் தொகுதியில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகி உள்ளன. அதனையடுத்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மின் ஒழுக்கே தீ விபத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதன் காரணமாக குறித்த பகுதியில் நேற்று இரவு ஒன்றரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article