யாழ்.மாவட்ட பதில் மாவட்ட செயலராக ம.பிரதீபன் நியமனம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன் பதில் மாவட்ட செயலராக இன்று (டிசம்பர் 30) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலராகக் கடந்த 3 ஆண்டுகளாகக் கடமையாற்றிய க.மகேசன், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றார்.

இந்த நிலையில் புதிய மாவட்ட செயலர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் மாவட்ட செயலராக ம.பிரதீபன் கடமையாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article