யாழ். மாநகர முதல்வர் பதவியிலிருந்து விலகினார் மணிவண்ணன்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் பதவியில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் விலகியுள்ளார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (டிசெம்பர் 30) யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சிச் சபை ஆணையாளர் ஆகியோருக்குக் கையளித்துள்ளார்.

நாளை (டிசெம்பர் 31) முதல் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த வாரம் 7 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டாவது தடவையாக மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்போதும் தோற்கடிக்கப்பட்டால் முதல்வர் பதவி வறிதாகும்.

இரண்டாவது தடவையும் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் நிலைமைமையே காணப்படுவதால், முதல்வர் பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை வி.மணிவண்ணன் எடுத்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

Share this Article