யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவு தொடர்பில் வெளியான தகவல்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவு இனி இடம்பெறாது என வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியிலிருந்து இன்று சனிக்கிழமை (டிசெம்பர்31) இரவு முதல் விலகிக் கொள்கின்றார். இது தொடர்பான கடிதம் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அவரால் அனுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அடுத்த முதல்வர் தெரிவு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோதே வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாநகர சபை கட்டளைச் சட்டத்தின்படி இனிமேல் முதல்வர் தெரிவை மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்த உள்ளூராட்சி ஆணையாளர், சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது என்றும் அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என்று குறிப்பிட்ட அவர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அதற்குப் பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Share this Article