யாழ். போதனா வைத்தியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக கறுப்புப் பட்டி அணிந்து நேற்று (ஜனவரி 24) கடமையாற்றினர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற கறுப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத் தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்றவற்றை நிவர்த்தி செய்யுமாறு கோரியும், முறையற்ற விதத்தில் தன்னிச்சையாக வரி என்ற போர்வையில் அரசால் பறிமுதல் செய்யப்படும் சம்பளப் பணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் கறுப்பு வாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதையும் ஒருங்கிணைத்து அரசாங்கத்தால் நிர்வகிக்கத் தவறிய மருந்துப் பொருட்களுக்கான முறையற்ற வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கையெழுத்துப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

Share this Article