யாழ் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் விக்னேஸ்வரன் மறைவு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கணிதத் துறை பேராசிரியருமான இ.விக்னேஸ்வரன் மாரடைப்புக் காரணமாக இன்று (பெப்ரவரி 17) காலமானார்.

இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பாடசாலை வீதி, கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் கிழக்கு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றியவர்.

துணைவேந்தராகப் பதவி வகித்த காலப்பகுதியில் மட்டுமல்ல தனது பல்கலைக்கழக தொழில் வாழ்வு காலங்களிலும் தமிழ்த் தேசியத்துக்காக பல்வேறு பணிகளை ஆற்றியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட பீடாதிபதியாகவும் பதவி வகித்தவர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவராக இருந்து அதே பல்கலைக்கழகத்தின் துணேவேந்தர் ஆனார் எனும் வரலாற்றை முதலில் பதிவு செய்தவர் பேராசிரியர் விக்கினேஸ்வரனாவார்.

Share this Article