யாழில் 4 பிரதேச செயலக பிரிவுகளில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழில் டெங்கு தொற்று பரவல் அதிகம் காணப்படுகின்ற நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி  டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நல்லூர், யாழ் நகரம்,கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், குறித்த பகுதிகளில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நான்கு பிரதேச செயலாளர் பிரிவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார திணைக்களம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவம் ஆகியோரை குறித்த நடவடிக்கையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

Share this Article