யாழில் விடுதிக்குள் புகுந்து வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தனியார் விடுதி ஒன்றுக்குள் புகுந்த கும்பல் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்குள் புகுந்தே வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (டிசெம்பர் 29) இரவு நடந்துள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பண்டத்தரிப்பைச் சேர்ந்த 21 வயதான ஒருவர் மீதே வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share this Article