யாழில் சைக்கிளில் சென்ற முதியவர் மயங்கி வீழ்ந்து சாவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வீதியில் சைக்கிளில் பயணித்தபோது மயங்கி வீழ்ந்தவர் மருத்துவமனை செல்ல முன்னர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (டிசம்பர் 12)பலாலியில் நடந்துள்ளது.

புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த செல்வம் சிவானந்தம் (வயது 81) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவர் சைக்கிளில் பயணித்தபோது திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை தெல்லிப்பழை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆயினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

இறப்பு விசாரணைகளை வலி.கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Share this Article