யாழில் சீரற்ற காலநிலையால் 4,094 பேர் பாதிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆயிரத்து 188 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 222 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

இடம்பெயர்ந்தவர்கள் உறவினர்கள் வீடுகளிலும், முன்பள்ளிகளிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர் என்று யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆயிரத்து 188 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 94 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 784 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 32 வீடுகள் பகுதிளவில் சேதமடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share this Article