யாழில் இருந்து தமிழகத்தில் தஞ்சமடைந்த மேலும் ஏழு பேர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தமிழகத்தின் தனுஷ்கோடியில் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தஞ்சமடைந்தனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்டவர்களே இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக 150,000 ரூபாய் பணம் கொடுத்து தாம் இலங்கையில் இருந்து வந்ததாக விசாரணையில் தஞ்சமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் மரைன் பொலிஸார் மண்டபப் பகுதிக்கு அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன.

Share this Article