மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, மாளிகாவத்தையைச் சேர்ந்த பழனி கணேசதாசன் (வயது-63) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் மேசன் வேலைக்காக இங்கு தங்கியிருந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்னிருக்கையில் இருந்து பயணித்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், பழனி கணேசதாசன் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமாரன் மேற்கொண்டார்.

Share this Article