முல்லைத்தீவில் இருந்து யாழுக்கு நூதமானமாகக் கசிப்பு கடத்தல் – மூவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கசிப்புக் கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியாலை, மாம்பழம் சந்தியில் வைத்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ்ஸில் உமிக்குள் மறைத்து வைத்து கசிப்புக் கடத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Share this Article