முன்னாள் உதவி அரசாங்க அதிபர் நாகேந்திரர் இராமச்சந்திரனின் இறுக்கிரியைகள் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஓய்வுநிலை நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபரும், முன்னாள் நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தலைவருமான 81 வயதுடைய நாகேந்திரர் இராமச்சந்திரன் அவர்கள் நேற்று(நவம்பர் 29) காலை யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார்.

அன்னாரின் பூதவுடல் நேற்று மாலை நெடுந்தீவுக்கு எடுத்துச்செல்லப்பட்டு கொடிவேல் அறிவாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை(டிசம்பர் 1) காலை 10.00 மணியளவில் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து நெடுந்தீவு கிழக்கு கட்டராமன்சல்லி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

Share this Article