முச்சுத் திணறல் ஏற்பட்டு யாழில் இருமாதக் குழந்தை உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த உமாரமணன் கேதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தைக்குச் சளி காணப்பட்டதை அடுத்துக் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் (ஜனவரி 1) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். இரவு 7 மணியளவில் குழந்தை அசைவற்றுக் காணப்பட்டுள்ளது.

குழந்தையை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

சுவாசக் குழாயின் மேற்பகுதியில் ஏற்பட்ட கிருமித் தொற்றால் சளி அதிகரித்ததை அடுத்து ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Share this Article