“மீற்றர் வட்டி” மாபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை!- சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீற்றர் வட்டிக்குப் பணம் கொடுப்பது, வட்டி கோரி மிரட்டுவது போன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வட்டிக்காக சொத்துக்களை மிரட்டிப் பறிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன என்று கூறப்படுகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் தகவல்களை வழங்கினால் துரிதகதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றில் தகவல்களை யாழ்ப்பாணத்தில் உள்ள எனது அலுவலகத்திலோ அல்லது எனக்கோ தெரிவிக்க முடியும் என்றும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Share this Article