மழையால் அறுவடை பாதிக்கப்படும் அபாயம் – யாழ். விவசாயிகள் கவலை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நெல் அறுவடை தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், திடீர் மழையால் விவசாயிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

வங்காள விரிகுடாவில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலைமையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்துவருகின்றது.

தற்போது பெய்யும் மழையால் அறுவடைச் செயற்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

போதிய மழை வீழ்ச்சி கிடைக்காது விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அறுவடையின்போது மழை பெய்தால் இழப்புக்கள் அதிகமாகும் என்றுமு் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Share this Article