மல்லாகத்தில் நடந்த பெரும் திருட்டு!- சந்தேகநபரை வளைத்துப் பிடித்த பொலிஸார்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தெல்லிப்பழை பொலிஸாரால் இன்று (பெப்ரவரி 20) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 10 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான திருட்டு நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம்(பெப்ரவரி 19) மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் பத்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில் பொலிஸ் பரிசோதகர் கலாவினோதன் தலைமையிலான தெல்லிப்பழை குற்றத்தடுப்புப் பொலிஸார் இன்றைய தினம் சந்தேக நபரையும் திருடப்பட்ட நகைகளையும் மீட்டனர்.
சந்தேக நபரையும் மீட்கப்பட்ட நகைகளையும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Share this Article