மக்களுக்கு இடையூறாக மாறியுள்ள பொலிஸாரின் வீதித் தடைகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடிப் பகுதியில் போராட்டத்தை தடுப்பதற்காக பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட வீதித் தடைகள் போராட்டம் முடிந்து இரண்டு நாள்களாகியும் இதுவரை அகற்றப்படாமை தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வீதித் தடைகள் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவுக்காக வந்திருந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று நல்லூர் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அதைத் தடுப்பதற்காகவே அங்கு பொலிஸாரால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

Share this Article