பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் எனக் கருதப்படும் சந்தேகநபர் ஒருவர் நேற்று(நவம்பர் 24) வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

விசேட அதிரடிப் படையினரும் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கை மூலம் இவர் கைது செய்யப்பட்டார்.

அனலைதீவில் இருந்து வந்து பொன்னாலை தெற்கில் திருமணம் செய்து வாழ்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.

இவர் தம்வசம் வைத்திருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா பொதிகளும் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share this Article