பேராசிரியர் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்று!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்று (பெப்ரவரி 21) இடம்பெற்றது.

அவரது பூதவுடல் மதியம் 11.30 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றன .

அஞ்சலி நிகழ்வில் துணைவேந்தர், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள்.

அத்துடன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளால் சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது.

Share this Article