நூலக கண்காட்சியும், நடமாடும் சேவையும்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சன சமூக நிலையத்தின் நூல் இரவல் கொடுக்கும் பகுதியான இரகுபதி நினைவு நூலக நடமாடும் சேவை நிகழ்வு நாளை(டிசம்பர் 7) நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியில் காலை 9.00 மணி தொடக்கம் பகல் 1.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

இரகுபதி நினைவு நூலகத்தில் உள்ள சிறுவர் பகுதி நூல்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான நூல்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு நூல்கள் என்பன இதன் போது பாடசாலை மண்டபத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

மாணவர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டு இந்த நூலக சேவையினை பயன்படுத்தி கொள்வதுடன் நூலகத்தில் அங்கத்தவராக இணைந்து நூல்களை இரவல் எடுத்து வாசிப்பதன் ஊடாக தங்களது அறிவினை விருத்தி செய்ய முடியும் என்பதே இந்த நிகழ்வின் குறிக்கோளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article