நெடுந்தீவு மேற்கு கோட்டைக்காடு பகுதியில் முளைக்கீரை அறுவடை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு ஊரும் ஊறவும் நிறுவனத்தின் நம்வாழ்வு நம்கையில் செயற்திட்டத்தின் கீழ் முளைக்கீரை அறுவடை நிகழ்வு இன்று (நவம்பர் 27) காலை 6.30 மணிக்ககு நெடுந்தீவு மேற்கு கோட்டைக்காடு பகுதியில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.

மேற்படி செயற்திட்டத்தின் இணைப்பாளர் கோ. தமிழ்மாறன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் ஊரும் ஊறவு நிறுவன தலைவர் யோ. சுஜீவன் , நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் மு.அமிர்தமந்திரன் மற்றும் களப்பணியில் ஈடுபடும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன் முதலாவது கொள்வனவு செயற்பாட்டினை நல்வாழ்வு நம்கையில் செயற்திட்டத்திற்கு காணியை வழங்கிய சி. ரெத்தினம் அவர்கள் உற்பத்தித் தளத்தில் வைத்து கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முளைக்கீரையானது அதிகமான இயற்கை முறையில் செய்கை பண்ணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article