நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 17!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு பாடசாலையின் உள்ளரங்கில் இடம்பெறவுள்ளது.

பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை பழைய மாணவ சங்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து இணைந்து கொண்டவர்களும், இதுவரை இணைந்து கொள்ளாத அனைவரும் தவறாது இணைந்து பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தின் வளர்சியில் பங்காற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் செயலாளர் அறிக்கை, பழைய மாணவ மன்றத்திற்காக தயாரிக்கப்பட்ட யாப்பு தொடர்பான கலந்துரையாடலும் ஏற்றுக்கொள்ளலும் மற்றும் எதிர்கால செயற்றிட்டம் தொடர்பான திட்டமிடல் ஆகிய விடயங்கள் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு
திரு ஏ.சச்சிதானந்தம் தலைவர்
(பாடசாலை முதல்வர்) 0779561543
திரு.கு.ஜனேந்திரன் உபதலைவர் 0770251033
திரு.பி.ரெட்னராஜ் செயலாளர் 0775026578
திரு.வே.கௌரிபாலன் உப செயலாளர் 0761520667
திரு.பி.பற்றிக் றொசான் பொருளாளர் 0712627567

Share this Article