நெடுந்தீவு தூய யூதாததேயு ஆலய திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு தூய யூதாததேயு ஆலய திருவிழா எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

யூதாததேயு ஆலயத்தின் திருதின வழிபாட்டின் முதல் நாள் வழிபாடுகள் நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. புனித ஜோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வீதியோர சிலுவைப்பாதை தியானமானது மாலை 4 மணிக்கு வெல்லை பிரதேசத்தில் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இரண்டாம் நாள் வழிபாடுகள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலியும் தொடர்ந்து நற்கருணை வழிபாடு மற்றும் ஆசீரும் இடம்பெறவுள்ளது. திருவிழா திருப்பலி எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை காலை 6:45 மணிக்கு இடம்பெறவுள்ளது.

திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் நலன்கருதி பேருந்து சேவையானது சனிக்கிழமை காலை 6 மணிக்கு மாவிலி துறைமுகத்திலிருந்து ஆரம்பித்து பிரதேச செயலக முன் வீதியால் திரும்பி ஆலயத்தை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article