நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவைக்கான விஜயத்தை யாழ்மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை இன்று (25/10) மேற்கொண்டிருந்தார்
நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி நிலான் யூலியஸ் அடிகளாரின் தலைமையில் நிகழ்வுகள் யாவும் சிறப்பாக இடம்பெற்றது
கடற்படையின் விரைவு படகு ஊடாக காலை நெடுந்தீவு துறைமுகத்தை வந்தடைந்த ஆயர் அங்கு அருட்பணிச்சபையினரின் வரவேற்பையும் ஏற்றுக்கொண்டார்
தொடர்ந்து குதிரைகளின் அணிவகுப்புடன் வாகன பேரணியாக சென்று பிரதேசசெயலக முன்றலிலிருந்து பங்குப்பணிமனை வரையிலான வரவேற்பு நிகழ்வுகளுடன் ஆலய வளாகத்தை சென்றடைந்தார்
புனித யுவானியார் ஆலயத்தில் காலை திருப்பலி ஒப்புக்கொடுத்து மன்றாடும் ஆயர் தந்தையவர்கள், பங்கின் 108 மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தையும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் இதன்போது வழங்கிவைத்தார்
திருப்பலியை தொடர்ந்து, புனரமைப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டதும் நீண்டகால வரலாற்றைகொண்டதுமான பங்குப் பணிமனையையும் ஆயர் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்