நாயன்மார்கட்டுக் குளத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார்கட்டுக் குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று (ஜனவரி 19) மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தை அவதானித்த பொதுமக்கள் அது தொடர்பாக யாழப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது.

Share this Article