நவக்கிரியில் 29 வயது இளைஞர் கஞ்சாவுடன் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரி பகுதியில் 29 வயது இளைஞர் ஒருவர் உடமையில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (பெப்ரவரி 15) மேற்கொண்ட நடவடிக்கையில் ஏழாலை பகுதியைச் சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share this Article