நகுலேஸ்வர ஆலய சிவராத்திரியை முன்னிட்டு விசேட வாகன தரிப்பிடங்கள்!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் மஹா சிவராத்திரி உற்சவம் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

சிவராத்திரி உற்சவத்துக்கு பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் வாகனத் தரிப்பிடத்துக்குப் பொருத்தமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெல்லிப்பழை பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

இதற்கென நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரம் அடியவர்கள் வருகை தரக்கூடும் என எதிர்பார்ப்பதனால் அடியவர்களின் வாகனங்களை முறையாக பாதுகாப்பாக நிறுத்துவதற்கு பொருத்தமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ் உள்ள இணைப்பின் ஊடாக அடையாளப் படுத்தப்பட்ட இடங்களின் விவரங்களை மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு – https://tinyurl.com/nagulaswaram

Share this Article