தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி சாதனை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய மட்ட இளையோருக்கான பளுதூக்கல் போட்டியில் யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரு வீராங்கனைகள் வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளனர்.

இந்த தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியானது பொலன்னறுவையில் நேற்று(டிசம்பர் 28) இடம்பெற்றிருந்தது.

குறித்த போட்டியில் 87 கிலோ எடை பிரிவில் ஜதுசா 103 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளதுடன் 71 கிலோ எடை பிரிவில் சிறீ வித்தகி 88 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவ்வாறு வெற்றியீட்டி சாதனை படைத்த மாணவிகளுக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

Share this Article