தெல்லிப்பளை வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தெல்லிப்பளையில் கடந்த 4 ஆம் திகதி நடந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் மூவர் நேற்று(டிசம்பர் 6) கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் வள்ளிபுனம், முத்துஐயன்கட்டு, கிளிநொச்சி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் 3 தேடப்பட்டு வருகின்றனர் என்றும் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி மேனன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்களைக் கிளிநொச்சிப் பகுதியில் வைத்து நேற்றுக் கைது செய்தனர். முகங்கள் மறைக்கப் பயன்படுத்திய துணிகள் மற்றும் இரு வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.

Share this Article