தென்னிந்திய திருச் சபையின் பேராயரை வரவேற்கும் நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தென்னிந்திய திருச் சபை யாழ். ஆதீனத்தின் 5ஆவது பேராயர் பேரருட்பணி அறிவர் வே.பத்மதயாளன் பதவியைப் பொறுப்பேற்கும் நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (ஜனவரி 3) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் சம்பிரதாயபூர்வ செயற்பாடுகள், வழிபாடுகள், பேராயர்களின் உரைகள், புதிய பேராயரை கௌரவிக்கும் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. அதன்பின்னர் புதிய பேராயரை கௌரவிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேராயர்கள், அரசியல் பிரமுகர்கள், நல்லை ஆதீனம், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா, தென்னிந்திய திருச்சபை நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article