திருத்த வேலைக்காக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ள நெடுந்தாரகை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமாகாண சபையின் ஆளுகைக்குட்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் பொறுப்பில் இருந்த நெடுந்தாரகை பயணிகள் படகு திருத்தவேலைகளுக்காக நாளை(நவம்பர் 25 ) நெடுந்தீவை விட்டு கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நெடுந்தீவில் இருந்து கடற்படையினரின் பொறுப்பில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருகோணமலையில் உள்ள படகு கட்டுமான நிறுவனத்திற்கு கொண்டு சென்று முழுமையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

Share this Article