தாய் கண்டித்ததால் மகன் உயிர்மாய்ப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மது அருந்தியதைத் தாய் கண்டித்ததை அடுத்து 14 வயதுச் சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 12) கைதடியில் நடந்துள்ளது.

14 வயதுடைய பிரதீபன் கோபிதன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு சிறுவன் மதுபோதையில் காணப்பட்டதை அடுத்து தாய் கண்டித்து, அடித்துள்ளார். அதையடுத்து சிறுவன் தவறான முடிவெடுத்து நச்சு மருந்தை அருந்தினார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article