தமிழ்க் கட்சிகளின் கூட்டணி முயற்சியில் பிளவு – விக்னேஸ்வரன், மணிவண்ணன் தனிவழி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உள்ளூராட்சித் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் வி.மணிவண்ணன் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

தேர்தல் சின்னம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் நகரில் உள்ள ரில்கோ விடுதியில் இன்று கூடினர்.

தேர்தல் சின்னம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வி.மணிவண்ணன் ஆகியோர் கூட்டத்திலிருந்து இடைநடுவே வெளியேறினர்.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கட்சி என்பனவே உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்கவுள்ளன. இவை குத்துவிளக்குச் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கவுள்ளன.

சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வி.மணிவண்ணன் ஆகியோர் மான் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

Share this Article