டெங்கைத் தடுக்க விசேட தொலைபேசி இலக்கம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்திலும் வடமாகாணத்திலும் டெங்குத் தொற்று தீவிரம் பெற்றுள்ள நிலையில், டெங்கைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு தொடர்பான தகவல்களை 24 மணிநேரமும் பெறவும் முறைப்பாடுகளை வழங்கும் விதமாகவும், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையால் இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பொதுமக்கள் 076 179 99 01 என்ற இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு முறைப்பாடுகள் மற்றும் தகவல் கோரல்களை மேற்கொள்ள முடியும்.

Share this Article