டெங்கு அறிகுறி தென்பட்டால் குருதிப் பரிசோதனை கட்டாயம்!- சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

டெங்கு தொற்று அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினசரி நூற்றுக்கணக்கானோர் டெங்கு நோய்க்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர்.இன்றும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதனா வைத்தியசாலைக்கு அப்பால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளிகளை பராமரிக்க விடுதிகள் உள்ளன.

அதேவேளை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை, கோப்பாய் பிரதேச வைத்தியசாலை, சண்டிலிப்பாய் பிரதேச வைத்தியசாலைகளிலும் டெங்கு நோய் அறிகுறி தொடர்பிலான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Share this Article