சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை – இந்தியாவின் நாகபட்டினம் இடையே மீண்டும் கப்பல் சேவையை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த ஸ்ரீ கப்பல் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் கப்பல் சேவை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனவரி முதல் கப்பல் சேவையை நடத்துவதற்கான பூர்வாங்க அனுமதிகள் இரண்டு அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து விட்டன. இதற்காக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இக்கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. இக்கப்பலில் 150 பயணிகள் தலா 60 கிலோ பொதிகளுடன் பயணிக்கலாம்.

ஒருவழிப் பயணக்கட்டணமாக 4,250 இந்திய ரூபாவும் மற்றும் வரிகளும் அறவிடப்படும். அத்தோடு ஒருவழிப் பயணக்கட்டணமாக 17,000 இலங்கை ரூபா மற்றும் வரிகள் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முற்பதிவுகளை தொலைபேசி செயலி மற்றும் இணைவழிகளில் மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது- என்றார்.

Share this Article