சிறப்புற இடம்பெற்ற நெடுந்தீவு நேதாமோகனின் கவிதை நூல் வெளியீட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு நேதாமோகனின் “இலை பெய்யும் காலம்” கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று(ஜனவரி 4) நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச கலாசார உத்தியோகத்தர் அ. சிவஞானசீலன் தலைமையில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய நிகழ்வின் முதன்மை விருந்தினராக நெடுந்தீவு பிரதேச உதவி பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் அவர்கள் கலந்துகொண்டு நூலினையும் வெளியிட்டு வைத்தார்.

நூலின் முதற் பிரதியினை நெடுந்தீவு கதிர் பிறைவேற் லிமிற்றட் இயக்குனர் கு. ஜனேந்திரன் பெற்றுக்கொண்டதுடன், வெளியீட்டு உரையினை நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் அ. பீலிக்ஸ் ஜேக்கப் மேற்கொண்டிருந்தார்.

வாழ்த்துரைகள், நூல் மதிப்பீட்டு உரைகள் மற்றும் சிறப்பு பிரதிகள் வழங்கல் என நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றதுடன் மண்டபம் நிறைந்த ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article