சர்வதேச மனக்கணித போட்டியில் யாழைச் சேர்ந்த 19 மாணவர்கள் பங்கேற்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மலேசியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 19 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இப் போட்டி எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில் யாழிலிருந்து மாத்திரம் 19 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article