சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கொழும்புத்துறை சிவயோகர் சுவாமி அறக்கட்டளையின் வறுமை தணிப்பு செயற் திட்டத்தின் கீழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜே/142 கிராம அலுவலர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் சூரிய சக்தி படலம் என்பன வழங்கப்பட்டன.

பொருளாதாரம் நலிவுற்ற 100 குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரத்து 700 ரூபா பெறுமதியான பொருள்கள் வழங்கப்பட்டன. இருவருக்கு இருவருக்கு மருத்துவ உதவி மற்றும் கல்விக்கான நிதி உதவி என்பன வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஆன்மீக அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article