கொங்கிறீட் வீதியாக மாற்றப்பட்ட நெடுந்தீவு பிரதான வீதியின் நிலைத்தன்மை ஆராய்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதான வீதி கொங்கிறீட் வீதியாக மாற்றும் வேலைகள் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் அதன் நிலைத்திரு தன்மை தொடர்பில் ஆராய்வதற்காக வட மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இன்றையதினம் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

பிரதான வீதியின் ஒரு பகுதியான மாவிலிதுறை தொடக்கம் வெட்டுக்களிமதகு வரையான பகுதியே கொங்கிறீற் வீதியாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒப்பந்தகாரரிடம் இருந்து வீதியினை பொறுப்பேற்றல் தொடர்பாகவே இக் களவிஜயம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

Share this Article