கனேடியத் தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் நேற்று (பெப்ரவரி 13) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேன்கொண்டிருந்தார்.

கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் யாழ்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையால் நடாத்தப்படும் என்லீப் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்காகவே கனேடியத் தூதுவர் தலைமையிலான குழு பல்கலைக்கழகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது.

இந்த விஜயத்தின் போது, துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி சி. ரகுராம், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைத் தலைவர் எஸ். கே. கண்ணதாஸன் ஆகியோருடனும், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறை மாணவர்களுடனும் கனேடியத் தூதுவர் கலந்துரையாடி நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

Share this Article