கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தவறுதலாகக் கீழே விழுந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (ஜனவரி 25) இரவு கொடிகாமம், மிருசுவிலில் நடந்துள்ளது. மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 34 வயதுடைய தங்கவேல் மோகனதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றபோது, தவறுதலாக கட்டுத்துவக்கு வீழ்ந்து வெடித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article