தீவகங்களில் நடைபெறும் கடற்போக்குவரத்து தொடா்பாக இன்றைய தினம் (டிசம்பா் 16) வடமாகாண ஆளுனா் திருமதி.பி.எஸ் சாள்ஸ் அவா்களுடான சந்திப்பு வடாமாகண ஆளுனா் அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 09.30 மணிக்கு இடம் பெற்றது.
இச்சந்திப்பில் நெடுந்தாரைக படகு பிரயாணம் மற்றும் எழுதாரகை படகு பிரயாணம் என்பன தொடா்பாக கலந்துரையாடப்பட்டது. இதன் பிரகாரம் குமுதினிப்படகு பழுதடைகின்ற சந்தா்ப்பங்களில் நெடுந்தாரகை படகு சேவையில் ஈடுபடுமறுாறும் அதற்கான எாிபொருளை வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்குவதாகவும் ஊழியா்களது சம்பளம் மற்றும் இதர தேவை கருதி பயணிகளிடம் இருந்து பணம் அறவிடப்படும் எனவும் ஆயினும் ஞாயிற்றுக் கிழமைகளில் குமுதினிப்படகுச் சேவை இடம் பெறாது காரணத்தில் அந்நாட்களில் நெடுந்தாரகை படகு இலவச சேவையை வழங்கும் எனவும் அதற்கான எாிபாருளினை வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் அனலதீவு எழுவதீவு கடற்போக்குவரத்தில் ஈடுபடும் எழுதாரகைப் படகிற்கான எாி பொருளினையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் தீவகங்களை பிரதி படுத்தும் பிரதேச சபை தலைவா்கள் பிரதேச செயலாளா்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியியலாளா் தொழிநுட்ப உத்தியோகத்தா் என பலரும் கலந்து கொண்டனா்.