பாராளுமன்றத் தேர்தல் – 2024 நெடுந்தீவுக்கான விசேட போக்குவரத்துஏற்பாடுகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாராளுமன்றத் தேர்தல் 2024 இல் வாக்களிப்பதற்காக யாழ்ப்பாணமாவட்டத்தின் நெடுந்தீவுப் பகுதிகளுக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டு வாக்காளர்கள் எந்தவித இடையூறுகளுமின்றி வாக்களிக்கச் சென்று திரும்பியதாக தெரிவித்துள்ளனர்.

இவ் விசேட போக்குவத்து ஏற்பாடுகளை செய்த நெடுந்தீவு பிரதேச செயலர் அனுமதி வழங்கிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்ததுடன், சேவையில் ஈடுபடுத்தப்பட்ட படகு உரிமையாளர்களான வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், நெடுந்தீவு பல. நோ. கூ. சங்கத்தினர், அ. கேதீஸ்வரன் ஆகியோருக்கும் நன்றியினைத் தொரிவித்துள்ளமை குறப்பிடத்தக்கதாகும்.

நெடுந்தீவில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கான 07 நேர படகுச் சேவைஅட்டவணை அடிப்படையில் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article