பேருந்து சேவை நாளை சீராகுமா?

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மக்களது போக்குவரத்தில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து கடந்த சில நாட்களாக சேவையில் ஈடுபடமுடியாத நிலையில் காணப்படுகின்றது

பேருந்து பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அதனை பயன்படு்த்த முடியாத நிலமை காணப்படுகின்றது இது தொடா்பாக கோண்டாவில் போக்குவரத்து சாலையினை தொடா்பு கொண்ட போது நாளைய தினம் பேருந்து திருத்துவதற்கான தொழிநுட்ப உத்தியோகத்தா்கள் நெடுந்தீவு செல்லவுள்ளதாகவும் மிக விரைவா சேவையில் ஈடுபடுத்த முடியும் எனவும் அறிவிக்ப்பட்டது.

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்துப் பாதை மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதுடன் பேருந்தும் அடிக்கடி பழுதடைகின்ற நிலமை காணப்படுகின்றது.

நெடுந்தீவு மேற்குபிரதேச மக்கள் பஸ் போக்குவரத்தின்மையால் மிகவும் கடினப்படுகின்றனா்.

Share this Article