கடமைகளைப் பொறுப்பேற்றார் யாழ். மாவட்டச் செயலர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள அ.சிவபாலசுந்தரன் நேற்று (ஜனவரி 18) மாவட்டச் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேற்றுக் காலை சர்வ மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின்னர், மாவடடச் செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன் மாவட்டச் செயலருக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.

கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் மாவட்டச் செயலர் மாவட்டச் செயலகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் சென்று உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.

Share this Article