ஊழியர் வருகை தொடர்பில் வடக்கு நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கு மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் எதிர்வரும் புத்தாண்டில் இருந்து ஊழியர் நாளேடு பயன்படுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் 80 வீதமான ஊழியர்கள் தமது வரவை நிறுவனங்களில் பதிவு செய்வதில்லை என்று தெரிவித்த அவர், அவர்களுக்கான நாளேடு காட்சிப்படுத்துவதுடன் ETF, EPF இலக்கமும் நாளேட்டிப் பதியப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பெரிய தனியார் நிறுவனங்களில் இந்த நடைமுறை இருக்கிறது. சிறிய நிறுவனங்கள், புடவை கடைகள், உணவகங்களில் தான் இந்த நடைமுறை இருப்பதில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த நடைமுறை பின்பற்றப்படா விட்டால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share this Article