ஊரும் உறவும் அமைப்பின் விவசாய செயற்றிட்டத்தின் அறுவடை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் நடைமுறைப்படுகின்ற “நல்வாழ்வு நம்கையில்” எனும் செயற்திட்டத்தில் செயற்படுத்தப்படுகின்ற விவசாய செய்கையின் ஒரு தொகுதியின் அறுவடை நிகழ்வு நேற்று(டிசம்பர் 16) இணைப்பாளர் மு. அமிர்தமந்திரன் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

அறுவடை செய்யப்பட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் இரசாயன உரம் அல்லது இரசாயன பூச்சி கொல்லி இன்றி இயற்க்கை முறையில் விளைவிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விளை பொருட்களை உள்ளூரில் தனியாரும் நிறுவனங்களும் கொள்வனவு செய்வதனூடாக சந்தைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு ஊரும் உறவும் நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article